அப்பட்மாதெரியுது -வயசாகிடுச்சி – ஜெனிலியா வெளியிட்ட புகைப்படம் -கலாய்க்கும் ரசிகர்கள் …
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெனிலியா.
இயக்குனர் ஷங்கர் இயக்கிய “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார்.
பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதிலும், ஜெயம்ரவி நடிப்பில் வெளியான “சந்தோஷ் சுப்பிரமணியம்” படத்தில் ஹாசினியாக டேக் இட் ஈஸி கேரக்டர் ( Cuteness Overloaded என்றும் சொல்வார்கள்) பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.
இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு ரித்திஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டார். சினிமாவை விட்டு விலகி விட்டாலும் சமூக வலைத்தளங்கள் வழியாக ரசிகர்களுடன் தன்னுடைய இருப்பை உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறார்.
அந்த வகையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள். உங்களுக்கு வயசாகிவிட்டது என்பது அப்பட்டமாக தெரிகின்றது என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இதோ அவர் வெளியிட்ட அந்த புகைப்படங்கள்.