அமரன் விமர்சனத்திற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பதில்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் அமரன் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவகார்திகேயன் இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார். அங்கு அனைவர்க்கும் ட்ரைலர் போட்டு காட்டப்பட்டது. பிக் பாஸ் இயக்குனராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். சில வருடங்களுக்கு முன் பிக் பாஸில் கமல் சார் தான் இந்த படத்தை அறிவித்தார். அதனால் அமரன் படத்திற்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் அதிகம் தொடர்பு இருக்கிறது என சிவகார்த்திகேயன் கூறினார்.
ஆர்மியில் இருப்பவர் எப்படி தாடி வைத்திருப்பார் என சிவகார்த்திகேயன் லுக் பற்றி பலரும் விமர்சனம் செய்தார்கள். அதற்கு பிக் பாஸில் சிவகார்த்திகேயன் பதில் கொடுத்து இருக்கிறார்.
“அது 44 ராஷ்ட்ரியா ரைபிள்ஸ் என்று ஒரு ஸ்பெஷல் டீம். அவர்களுக்கு தாடி பற்றிய கட்டுப்பாடுகள் இல்லை. அவரகள் மக்களோடு மக்களாகவும் சில நேரம் இருப்பார்கள். அதனால் தான் அப்படி” என சிவகார்த்திகேயன் கூறினார்.