“அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவன்” குற்றவாளி போலீசில் சரண்!!

அமெரிக்காவில் படித்து வந்த கர்நாடக மாணவன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சுட்டுக்கொன்ற கொலையாளி போலீசாரிடம் சரணடைந்துள்ளார் .
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள குவேம்பு நகரை சேர்ந்தவர் அபிஷேக் சுதேஷ் பட் இவர் மைசூரில் என்ஜினியர் படித்துவிட்டு தனது மேல்படிப்பிற்க்காக அமெரிக்கா சென்று அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பல்கலைகழகத்தில் எம்.ஏ கம்பியூட்டர் சயின்ஸ் படித்து வந்துள்ளார் .மேலும் பகுதி நேரமாக அங்குள்ள உணவு விடுதியில் பணியாற்றி வந்துள்ளார் . வழக்கம் போல நவம்பர் 28ம் தேதியும் உணவகத்தில் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் போது மார்ப நபர் அபிஷேக்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். இதில் அபிஷேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் . இதனை அறிந்த பெற்றோர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர் .
சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவந்தனர் .இந்நிலையில் அபிஷேக்கை சுட்டு கொன்றதாக கூறி எரிக் ட்யூனர் என்பவர் போலீசில் சரணடைந்துள்ளார் .அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .