அரசு பள்ளியில் மாணவர்கள் விசிறி விட பாய் போட்டு படுத்து தூங்கிய ஆசிரியை-வைரலாகும் சர்ச்சை வீடியோ
உத்தர பிரதேசத்தில் அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியை, குழந்தைகளை விசிறியால் வீச செய்து, வகுப்பறையில் பாய் போட்டு படுத்து துாங்கிய, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது. அலிகார் மாவட்டம் கோகுல்புர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் மதிய உணவு இடைவெளியின் போது மாணவர்களை வீசிறியால் வீச சொல்லிவிட்டு, ஆசிரியை டிம்பிள் பன்சால் பாய் போட்டு ஹாயாக படுத்துறங்கி உள்ளார். இதையடுத்து, இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவ ஆசிரியை டிம்பிள் பன்சால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.