அறந்தாங்கி: 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது…!!!

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 31-ந் தேதி இரவு முதல் காணவில்லை கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏம்பல் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில், சிறுமியை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் அந்த சிறுமி ஏம்பல் கிளவி தம்மம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வரத்து வாரியில் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் போலீசாரிடம் கூறுகையில், சிறுமியை ஒரு வாலிபர் கறம்பவயல் காளிகோவில் பக்கம் அழைத்து சென்றதாக தெரிவித்தனர். அதன்பேரில், அந்த வாலிபர் மற்றும் இன்னொரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சிறுமி பாலியல் வழக்கில் சிறுமியின் வீட்டிற்கு அருகே வசித்து வரும் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.