குழந்தை இன்மை… காதல் பிரபுவின் சூப்பர் மெசேஜ் !!
இந்த வாரம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தாராள பிரபு கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படத்தில் கால்பந்து விளையாட்டு வீரராக நடிக்கிறார்.
ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஒரு நல்ல வேலைக்குச் செல்லும் முயற்சியில் ஈடுபடுகிறார். அம்மா, பாட்டி ஆகியோர் நடத்தும் பாரம்பரியம் என்ற அழகுநிலையத்திலும் உதவியாக இருக்கிறார். அவருக்கு தன்யா ஹோப் மீது காதல். இதனிடையே, கருத்தரிப்பு மையம் நடத்தும் டாக்டர் விவேக், விந்து தானம் செய்ய நல்ல ஆரோக்கியமான, திடகாத்திரமான, கெட்ட பழக்கங்கள் இல்லாத ஒரு இளைஞரைத் தேடி வருகிறார்.
ஹரிஷ் கல்யாண் விந்து தானம் செய்வதை வீட்டுக்கும், காதலிக்கும் தெரியாமல் மறைத்து நிறைய பணம் சம்பாதிக்கிறார். ஹரிஷுக்கும், தன்யாவுக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால், தன்யாவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலையில் அவருடைய கர்ப்பப்பை இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில் ஹரிஷின் விந்து தானம் பற்றி அனைவருக்கும் தெரிய வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
நகைச்சுவை கலந்து நாயகன் கதாபாத்திரம்.
பலருடைய வாழ்வில் குழந்தை ஆசையைத் தீர்த்தவருக்கு தன் வாழ்க்கையிலேயே பிரச்சினை வர கவலை கொள்கிறார். ஒரு பக்கம் மனைவி, மறுபக்கம் அம்மா, இன்னொரு பக்கம் டாக்டர் என சிக்கித் தவிக்கும் ஒரு கதாபாத்திரம். நடிப்பைப் பொறுத்தவரையில் ஹரிஷ் அசத்தியுள்ளார்
பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஹரிஷ் கல்யாண். கால்பந்து வீரராக ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்குச் செல்ல நினைப்பவருக்கு ஸ்பெர்ம் டொனேஷன் மூலமே லட்சம் லட்சமாக பணம் வருகிறது. காதலியைத் திருமணம் செய்து கொண்ட பின் தானம் செய்வதை விட்டுவிடுகிறார்.
ஹரிஷ் விந்து தானம் செய்ய முடிவெடுக்கும் காட்சியும், கிளைமாக்சில் அவர் செய்தது சரிதான் எனப் புரிய வைக்கும் காட்சியும் மிக மிக நெகிழ்ச்சியானவை. அதிலும் கிளைமாக்சில் அத்தனை குழந்தைகளைப் பார்த்து தன்யா சந்தோச படுவது படத்தின் ஹயிலைட். படம் முழுக்க முழுக்க அடல்ட் கன்டென்ட் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செம்ம மெசேஜ். முதல் நாளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது