ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் விபரீதமுடிவு!
ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வசந்த் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் மத்திய பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் வசந்த். இவருக்கு 22 வயது ஆகிறது. வசந்த் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்திருந்தார்.
இவர் செங்கல்பட்டு மாவட்டம் பள்ளியகரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மேலும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி தினமும் பணிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் விசாரைண நடத்தினர். இந்த விசாரைணயின்போது அவர் தனது சிம்கார்டை உடைத்து இருப்பது தெரியவந்தது.
மேலும் விடுதியில் தங்கியிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது வசந்த் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியிருந்ததும், அதனை செலுத்த முடியாமல் அவர் தவித்ததும் தெரியவந்தது.
மேலும் குடும்பத்தினரிடம் இருந்து அவர் அடிக்கடி பணம் பெற்று வந்த நிலையில் தற்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் செயலியில் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாததால் இந்த விபரீத முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.