ஆறுதலாக இருந்த 81 வயது தந்தை..! மகள் மற்றும் பேத்தி ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் !!

சென்னை கீழ்கட்டளையில் தாய் மற்றும் மகள் ஒரே புடவையில் தூக்கு மாட்டி கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்கட்டளை துரைசாமி நகர், 1-வது தெருவில் வசித்து வருபவர் பிரபாவதி. இவர் 9ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளுடன் வசித்துவருகிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தன் கணவனை இழந்த பிரபாவதி மகள் சொப்னாவுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
கணவரை இழந்த பிரபாவதிக்கும் பேத்திக்கும் ஆறுதலாகவும், மகளின் குடும்பச் செலவுக்கு செல்வராஜ் (81) பணம் கொடுத்து வந்தார். பிரபாவதியின் தந்தை கீழ்கட்டளை காமராஜர்நகர், ராஜீவ் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (81) தான் தினமும் மகளின் வீட்டிற்கு வந்து பார்த்து செல்லும் பழக்கம் உடைய செல்வராஜ்,
28-ம் தேதி காலை மகளையும் பேத்தியையும் சந்தித்துவிட்டு சென்றுள்ளார். அடுத்தநாள் 29-ம் தேதி காலை 8 மணியளவில் மகளையும் பேத்தியையும் பார்க்க சென்றுள்ளார், வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில் தட்டியும் திறக்காததால் தூங்கி கொண்டிருப்பார்கள் என நினைத்து செல்வராஜ் திரும்பிச் சென்றுவிட்டார். அதன்பின் மாலை 4 மணியளவில் இளைய மகள் கவிதாவுடன் பிரபாவதியின் வீட்டுக்கு வந்துள்ளார்.
ஆனால் அப்போதும் கதவைத் தட்டியும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே பார்த்த செல்வராஜ், தனது மகள் மற்றும் பேத்தி ஒரே சேலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்த செல்வராஜ் மடிப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து தாய், மகள் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் தந்தை செல்வராஜ், ‘எனக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். அதில் 3வது மகள் பிரபாவதி. அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. என் கடைசி மகளும் மூன்றாவது மகளும் கீழ்கட்டளையில் வசிக்கின்றனர். மேலும் கடைசி மகள் கவிதா வீட்டில் நான் 3 மாதங்களாகக் குடியிருந்து வருகிறேன்.
கணவனை இழந்த என் மகள் பிரபாவதி அதிலிருந்து யாருடனும் சரியாகப் பேசமாட்டார்.
மனஉளைச்சலோடு காணப்பட்டார். கணவர் இழந்த துக்கத்திலிருந்து மீளமுடியாத பிரபாவதி, அவள் மகளுடன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இருவரின் சடலங்களையும் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். வயதான காலத்தில் தந்தையை கஷ்டப்படுத்த விரும்பாத பிரபாவதி மகளுடன் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.