இட்லி சாப்பிட்டால் உடல்நல கோளாறு ஏற்படுமா?
எளிய உணவாக இருக்கும் இட்லியை சரியான முறையில் சாப்பிட்டால் மட்டுமே அதன் முழு பலனையும் அடைய முடியுமாம். பெரும்பாலான தென்னிந்தியா மக்கள் தங்களது காலை உணவாக இட்லி எடுத்துக் கொள்கின்றனர். சமைப்பதற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் எளிய உணவாக இருக்கின்றது. அரிசியும், உளுந்தும் சேர்த்து அரைத்து மாவை சற்று புளிக்க வைத்து தயாரிப்பதே இட்லி ஆகும். இதற்கு சட்னி, சாம்பார் என்று சாப்பிடுவது தனி ருசி தான்.
இட்லி ஆவியில் வேக வைப்பதால் எளிதில் ஜீரணமாகவும் செய்கின்றது. இதனை காலை உணவாக மட்டுமின்றி இரவு உணவாகவும் எடுத்துக் கொள்கின்றனர்.
சாம்பார் சட்னி தவிர விதவிதமாக பொடியையும் வைத்து சாப்பிடுவதுண்டு. இட்லி சாப்பிடுவது ஆரோக்கியம் என்றால் அதனை முறையாக சாப்பிட வேண்டுமாம்.
இட்லியில் பல நன்மைகள் இருந்தாலும் அதற்கென உள்ள முறைப்படி சாப்பிடாமல் இருந்தால் தீய விளைவுகளை ஏற்படுத்தும்.
இட்லிக்கு சட்னி வகைகள், சாம்பார், பொடி வகைகள் என இருக்கும் போது இதில் ஏதேனும் ஒன்றினை வைத்து சாப்பிட்டால் உடம்பிற்கு எந்த தீங்கும் இல்லையாம்.
ஆனால் எல்லாவற்றையும் வைத்து சாப்பிட வேண்டும் என்ற நான்கு இட்லிக்கு நான்கு வகை பொடிகள், மூன்று வகை சட்னிகள் என எடுத்துக்கொண்டால் அது உடலுக்குள் செல்லும்போது சில பாதிப்புகளை உண்டு பண்ணுகின்றன.
இதனால் நெஞ்செரிச்சல், வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதுடன், இட்லி பொடியில் சேர்க்கும் நல்லெண்ணெய் அல்லது நெய் அதிக கலோரிகளுக்கு வழிவகுக்கும்.
காலை இட்லியுடன் வடை சாப்பிடுவது நல்லதல்ல. இதில் உள்ள அதிக கலோரிகள் உடலுக்கு நன்மையை அளிக்காது.
நீங்கள் 2 அல்லது 3 இட்லிகள் சாப்பிட்டால் ஒரு கப் சாம்பார் வைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் தேங்காய் சட்னி உடல் எடையை கூட்டும். அளவாக உண்பது நல்லது.
விரும்பினால் புதினா, வெங்காயம், தக்காளி இதில் ஏதேனும் ஒரு சட்னி வகை வைத்து சாப்பிடலாம். உடலுக்கு தேவையான வைட்டமின்களை தரும்.