“இத்தன நாளா நீங்க தமிழ்ன்னு நெனச்சிட்டு இருந்தோம்..?”
தமிழ் திரையுலகில் சமீப காலமாக தனி கவனத்தை ஈர்த்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் காக்கா முட்டை, தர்ம துரை, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார்.
தொடர்ந்து அழுத்தமான கதாப்பாத்திரமாக தேர்வு செய்து நடித்து வரும் இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வானம் கொட்டடும், வேல்ட் ஃபேமஸ் லவ்வர் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் மட்டும் அல்லாமல் கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் இறங்கி கலக்குகிறார் அம்மணி. இதனால், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.
இன்று உகாதி பண்டிகை. ஆனால், இந்தியா முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இந்த பண்டிகை கொண்டாட்டங்கள் கலை இழந்து உள்ளது.
உகாதி பண்டிகை என்றால் ஆறு சுவை கொண்டு ஆறு வகையான உணவு பதார்த்தங்களை செய்து கொண்டாடுவது மரபு. சந்தோஷம், சோகம், கோபம், பயம், வெறுப்பு, ஆச்சரியம் என ஆறு குணங்களுக்கு ஆறு வகையான உணவுகளை செய்து மக்கள் கொண்டாடுவார்கள்.
இது கர்நாடக மற்றும் ஆந்திர மாநில மக்களால் அதிகம் கொண்டாடப்படுகின்றது. அதில், ஆச்சரியத்தை குறிக்கும் உணவான மாங்காயை வைத்து செய்யும் உகாதி பச்சடி-யை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்து அந்த புகைப்ப்டத்தை வெளியிட்டு உகாதி வாழ்த்து கூறியுள்ளார்.
இதனை பார்த்த பலரும், நீங்க தமிழ் என்று நினைத்திருந்தோம். நீங்கள் தெலுங்கா..? என்று கேட்டு வருகிறார்கள்.