இந்த கருட மந்திரம் 108 முறை தொடர்ந்து சொன்னால் இது நடக்கும்

December 2, 2020 at 7:28 am
pc

கொரோனா பிரச்சனைக்கு முக்கிய காரணமே ராகு, கேது தான் பக்ஷி ராஜனான கருடாழ்வாரின் வழிபாடு மட்டுமே நம்மை இந்த பேராபத்தில் இருந்து காக்கும்.முதலில் ஒரு அடிப்படை உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கழுகு வேறு, கருடன் வேறு.விலங்கியலின் படி புலியும், பூனையும் கூட ஒரே குடும்பம் தான். கருடன், கழுகு இரண்டுமே தோற்றத்தில் ஒரே மாதிரி இருந்தாலும் கழுகு என்பது மாமிச பக்ஷிணி ஆனால் கருடன் என்பது வேத பக்ஷிணி.நம் நாட்டில் கழுகின் எண்ணிக்கையே ரொம்ப கம்மி கழுகை விட கருடனின் எண்ணிக்கை இன்னும் ரொம்ப கம்மி. ஆனாலும் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் என்றாலும், சிவன் கோவில் கும்பாபிஷேகம் என்றாலும் கருடாழ்வார் கோபுரத்தை வந்து வட்டமடிப்பதை நாம் பார்க்கிறோம்.

மேலும் திருப்பதி பிரமோற்சவம், திருவண்ணாமலை கார்த்திகை தீபம், திருச்செந்தூர் சூர சம்ஹாரம், சபரிமலை மகர ஜோதி போன்ற முக்கிய ஆலய நிகழ்வுகளில் பக்ஷி ராஜன் கரெக்ட்டா வந்து ஆஜர் ஆகிடுவார்.
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் கருடாழ்வார் இன்றுவரை பல அற்புதங்களை செய்து கொண்டிருக்கிறார்.சர்ப்ப தோஷம் முதல் சர்வ தோஷங்களும் தீர கருட பிரயோக மந்திரம் ஒன்றே தீர்வு.
இந்த கருட பிரயோக மந்திரம் இதுவரை பல அற்புதங்களை செய்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு கிராம தேவதைக்கு சில மாந்த்ரீகர்கள் போட்ட மந்திர கட்டை இந்த கருட மந்திரம் அவிழ்த்தது. பலரின் தீய கர்ம வினைகளை இந்த கருட மந்திரம் போக்கி உள்ளது.3 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் ஒரு சிறுவன் இருந்தான். அவனின் பெற்றோர் இந்த கருட மந்திரத்தை அவன் அருகே அமர்ந்து தொடர்ந்து உச்சிரித்து கொண்டிருந்தார்கள் அதன் பலனாக வெறும் 2 வாரங்களில் அந்த சிறுவன் கோமாவில் இருந்து மீண்டான். இதுபோல் பல உதாரணங்களை சொல்லலாம்.இருந்தாலும் இந்த கருட பிரயோக மந்திரம் பல லக்ஷம், பலகோடி மக்களிடம் பரவ வேண்டும் பல லக்ஷம் மக்கள் இந்த மந்திரத்தை சொன்னால் தான் கொரோனாவின் தாக்கம் குறையும்.

இந்த கருட பிரயோக மந்திரத்தை ஒருநாளைக்கு 108 முறை எனும் விதத்தில் தொடர்ந்து 11 நாட்கள் சொன்னாலே இந்த மந்திரம் நம்மை ஒரு கவசமாக காக்கும். இந்த கருட மந்திரத்தை 108 முறை தொடர்ந்து சொன்னால் உங்கள் நெற்றியில் லேசாக வியர்க்கும். AC போட்டு சொன்னாலும் வியர்க்கும். அதே சமயம் நீங்கள் நல்ல வெய்யிலில் இந்த மந்திரத்தை 108 முறை சொன்னாலும் வியர்ப்பது மட்டுமல்லாமல் உங்கள் நெற்றியின் இடது பக்கம் ஒருவித லேசான குளிர்ச்சியை நீங்கள் உணர்வீர்கள்.

ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ரூபாய,வினத புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹு பராக்ரமாய, பக்ஷி ராஜாய,சர்வ வக்கிர நாசநாய, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ,விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.

எனும் இந்த மந்திரம் கொஞ்சம் பெரிசு இதை 108 முறை தொடர்ந்து சொல்ல 40 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும். அதனால் காலையில் 36, மாலையில் 36, இரவு 36, என மூன்று வேளை இந்த மந்திரத்தை சொல்லலாம் இல்லை என்றால் குறைந்த பக்ஷம் காலை 11, மாலை 11, இரவு 11 என ஒரு நாளைக்கு 33 முறை இந்த மந்திரத்தை சொல்லலாம். இதை சொல்ல, சொல்ல கற்பனையே பண்ணி பார்க்க முடியாத ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனை நீங்கள் உணர்வீர்கள் .

எம்பெருமான் திருவடிகளே சரணம், கருடாழ்வார் திருவடிகளே சரணம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website