இந்த பைக் ஸ்டண்ட் உண்மையிலே “நம்ம தளபதி” தான் செய்தாரா ?? வைரலாகும் “பிகில்” ஸ்டண்ட் வீடியோ
விஜய் ஒரு பிஸியான சாலையில் பைக்கில் வேகமாக செல்வதைப்போலவும், திரும்பும் ஒரு இடத்தில் ஸ்கிட் அடிப்பது போலவும் பதிவாகியுள்ள இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். ‘பிகில்’ படத்தில் ஒரு காட்சியில் பைக் ரைடு செய்திருப்பார். இப்போது ரசிகர்களால் பகிரப்பட்டுவரும் இந்த வீடியோக்கள், ‘பிகில்’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அட்லீ இயக்கிய இப்படத்தில் விஜய் தந்தை-மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இது உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.
‘பிகில்’ திரைப்பட வெற்றிக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்திற்கு ரசிகர்கர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது, மேலும் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் ‘மாஸ்டர்’ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், தற்போது ‘பிகில்’ படத்துக்காக விஜய் செய்த அசல் பைக் ஸ்டண்ட் என இரண்டு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.