இந்த விஷயத்திற்காகதான் விஜயகாந்த் வீட்டிற்க்கு சென்றார் விஜய்!!

August 20, 2024 at 11:07 am
pc

நடிகர் விஜய் நடிப்பில் GOAT படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் டிரைலரும் சமீபத்தில் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கிறது. விஜய் இரண்டு ரோல்களில் நடித்திருப்பது, பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலரும் நடித்து இருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.

இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் திரையில் கொண்டு வர இருப்பதாக முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தை நடிகர் விஜய் சந்தித்து இருக்கிறார். படத்தில் விஜய்காந்த் வரும் காட்சியை காட்டி அனுமதி வாங்கத்தான் இந்த சந்திப்பு நடந்திருப்பதாக தெரிகிறது.

இந்த புகைப்படம் இணையத்தில் படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website