இரண்டாவது முறையாக ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்த மோடி!
அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். கடந்த 32 நாட்களுக்குள் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது இது இரண்டாவது முறையாகும். உக்ரைன் பயணத்தின்போது ஆகஸ்ட் 23-ம் திகதி ஜெலன்ஸ்கியை மோடி சந்தித்துப் பேசினார்.
நியூயார்க்கில் ஜெலன்ஸ்கியை சந்தித்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் மோடி வெளியிட்டார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உக்ரைன் பயணத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த இரு நாடுகளும் கடமைப்பட்டுள்ளதாகவும்,
மேலும், ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து பல நாடுகளின் தலைவர்களுடன் பேசி வருவதாக மோடி ஜெலன்ஸ்கியிடம் கூறியதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
போர் நிறுத்தத்திற்கு விரைவில் வழி காணப்பட வேண்டும் என்று அனைவரும் நம்புகிறார்கள்.
போரைத் தடுக்க பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார். மோடியின் உக்ரைன் பயணத்தையும் ஜெலன்ஸ்கி பாராட்டினார். பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை நாடு திரும்பினார்.