இரவு படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா செய்த செயல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக புகழின் உச்சத்தில் வலம் வந்து லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து 20 ஆண்டுகளாக சினிமாவில் டாப் நடிகையாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். தமிழ் சினிமா கடந்து இந்தியில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்திலும் நடித்து பாலிவுட் சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
தற்போது, யாஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படத்திலும், மலையாளத்தில் நிவின் பாலியுடன் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ என்ற படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்நிலையில், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படப்பிடிப்பின் போது அவர் சிறு வயது ரசிகர் ஒருவருடன் சைகையில் பேசும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில், “நயன்தாரா இரவு நேர படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்தபோது ஒரு சிறுவன் நயன்தாராவின் பெயரை சத்தமாக கத்துகிறான். அதை கவனித்த அவர் சாப்பிட்டாயா, போய் தூங்கு” என்று கூறுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.