இளையோரே பெண்ணை பற்றிய முழு விவரம் தெரியாமல் திருமணத்திற்குள் நுழையாதீர்…. திருமணமான 40 ஆவது நாளில் வீட்டில் இருந்த நகைகளை திருடி சென்ற இளம்பெண்….
சென்னையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனுடன் 40 நாட்கள் வரை வாழ்ந்துவிட்டு தலைமறைவாகியுள்ள இளம்பெண்ணின் செயல் குடும்பத்தாரை கடுமையாக பாதித்துள்ளது. பெண்ணின் விவரம் எதுவும் ஆராயாமல் திருமணம் செய்தால் நிலை என்னவாகும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.
சென்னை தாம்பரம் தாம்பரம் அடுத்த ரங்கனாதபுரத்தை சேர்ந்த தம்பதியின் மூத்த மகன்தான் நடராஜன்(30). இவர் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது பேக்கரியில் வேலை பார்த்து வந்த அபிநயா (28) என்ற பெண்ணுடன் நடராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடவையில் காதலிக்க தொடங்கினர். இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த நடராஜன் அபிநயாவின் பெற்றோரை தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார்.
அதற்கு அபிநயா, நான் ஏற்கனவே வயதான நபரை திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்துவிட்டேன். எனவே, இந்த திருமணத்துக்கு எனது பெற்றோர் சம்மதிக்கமாட்ர்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நடராஜனின் பெற்றோரிடத்தில் அபிநயா தெரிவித்துள்ளார். இதனால் இரக்கம் பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ரங்கனாதபுரம் பெருமாள் கோவிலில் நடராஜன் பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.
திருமணமாகி 40 நாட்கள் ஆகிய நிலையில் சம்பவத்தன்று காலை படுக்கையில் இருந்து அபிநயா திடீரென மாயமியுள்ளார். பின்பு அறையில் இருந்த பீரோ திறந்து இருந்தால் பார்த்த போது அதில் வைக்கபட்டிருந்த 17 சவரன் தங்க நகைகள், பட்டு புடவைகள் மற்றும் 20,000 ரொக்கம் ஆகியவை மாயமானது தெரியவந்தது.
இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அபிநயாவின் ஆதார் கார்டை கைபற்றி அதில் இருக்கும் விலாசத்திற்க்கு போலீசார் வரைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, அபிநயாவின் பின்புலம் எதுவும் தெரியாமல் திருமணம் செய்து வைத்துள்ளனர். அபிநயா யார்? அவருக்கு உண்மையில் ஏற்கனவே திருமணம் நடந்துள்ளதா உள்ளிட்ட விவரங்கள் அவரை கைது செய்த பிறகே தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர்.