ஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபர்: தடைப்பட்ட பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா பணிகள்!
பாரிஸ் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன் நபர் ஒருவர் ஈபிள் கோபுரத்தின் மீது ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கின் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிறைவு விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஒரு திடுக்கிடும் சம்பவம் நடந்தது. சட்டை இல்லாமல் நபர் ஒருவர் ஈபிள் டவரை ஏறிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களில் அந்த நபர் 330 மீட்டர் உயரமுள்ள டவரை எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் ஏறிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனால் பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ர் குறிப்பிட்ட உயரத்தை அடைந்த பிறகு அந்த நபரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
ஈபிள் டவரின் மீது ஏறிய நபரின் நோக்கம் இன்னும் தெரியவரவில்லை, அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் ஈபிள் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் ஒலிம்பிக் நிறைவு விழாவிற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டன.
இருப்பினும் நிறைவு விழா திட்டமிட்டபடி நடைபெறும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.