உடனுக்குடன் மழை தகவல்களை பெற Tamilnadu Alert: தமிழக அரசின் மொபைல் செயலி.. உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!
நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்து இருந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அப்போது பேசிய அவர், சென்னையில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமாக அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடிக்கிவிட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னை மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் நிவாரண உதவிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாமல் இருந்தால் அதை சுற்றி வேலி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.