உயரப் பறந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி!

August 20, 2024 at 11:26 am
pc

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.

தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளை நடிகர் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

வருகிற 22 ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார்.

இதற்காக சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று கட்சி கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்திருக்கிறார்.

மேலும், கட்சி கொடி அறிமுக விழாவில் பங்கேற்க தொகுதி வாரியாக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website