உல்லாசத்திற்கு அழைத்த 14 வயது சிறுவன், ஆசைக்கு இணங்காததால் நடந்த கொடூரம் .
வாடா மாநிலமான பீகாரில் உள்ளார் ஷம்புதம்திவில் அராசி கர்ஷாப் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் மிதுன் தாதியா மற்றும் ஷீலா தேவி. இவர்களுக்குத் திருமணமாகி கோமன்குமார், சத்தியம் குமார், என 2 மகன்களும், துளசி குமாரி என்ற ஒருமகளும் உள்ளனர். வறுமையின் காரணமாக தமிழகம் வந்த இவர்கள், குடும்பத்துடன் திருப்பூரீல் வாடகை வீட்டில் தங்கியிருந்து, அந்த பகுதியில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மிதுன் தாதியாவிற்கும், ஷீலா தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கணவர் மிதுன் தாதியா தனது குழந்தைகள் 3 பேரையும் பீகாருக்கு அழைத்து சென்று விட்டார். ஆனால் ஷீலா கணவருடன் செல்லாமல் திருப்பூரிலே தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் ஷீலா தேவியின் வீட்டு கதவு நேற்று காலை நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்துள்ளது. காலையில் வேலைக்கு செல்லும் அவர், வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவைத் உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஷீலா தேவி பிணமாகக் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் திருப்பூர் வடக்கு போலீசுக்குத் தகவல் தகவல் கொடுத்தனர்.பின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஷீலா தேவியின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது கழுத்தில் காயம் இருந்தது. எனவே கழுத்தை நெரித்து ஷீலா தேவி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகத்தினர் .
கொலையாளியைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது ஷீலா தேவிக்கும், கொங்குநகரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. நாட்கள் செல்ல செல்ல இந்த பழக்கம் தகாத உறவாக மாறியுள்ளது. கணவன் மிதுன்தாதியா வேலைக்கு சென்ற பிறகு, வீட்டிற்கு வரும் சிறுவனுடன் ஷீலா தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த காரணத்தினால் தான் மனையின் நடவடிக்கை குறித்து அறிந்த கணவர் மிதுன்தாதியா, ஷீலாவை கண்டித்துள்ளார். வயது வித்தியாசம் இல்லாமல் இப்படி சிறுவனுடன் பாலியல் உறவில் இருக்கிறாயே என சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட, தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு மிதுன்தாதியா பீகாருக்கு சென்று விட்டார். ஷீலா தேவி கணவருடன் ஊருக்குப் போகாமல் திருப்பூரில் தங்கி விட்டார். கணவர் ஊருக்கு சென்றதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஷீலா தேவி, சிறுவனுடன் அடிக்கடி தனிமையிலிருந்துள்ளார்.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு ஷீலா தேவியின் வீட்டிற்கு சென்ற சிறுவன் ஷீலா தேவியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளான். ஆனால் அவர் இன்று முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் ஷீலா தேவியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் பின்னர் கோபத்தில் ஷீலா தேவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். என்பதை சிறுவனை ஒப்புக்கொண்டார் போலீசார் கைது செய்துள்ளனர்.