என்ன நம்பவச்சி மோசம் செய்துட்டாங்க.. கதறும் முத்த காட்சி நடிகை.
1986ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ‘புன்னகை மன்னன்’ இப்படத்தில் கமல் நடித்திருக்கும் காதல் காட்சி பார்ப்பவர்களையும் மெய்சிர்க்கவைக்கும் அந்த அளவிற்க்கு மக்கள் மனத்தில் இப்படம் பதிந்த்துள்ளது. அப்படத்தில் வரும் முத்த காட்சி தற்போது பல்வேறு சர்ச்சையாகி உள்ளது.
அப்படத்தில் கதாநாயகன் கமல் மற்றும் கதாநாயகி ரேகா இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் பிரிவின் காரணமாக இருவரும் மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். அப்போது நாயகி ரேகாவின் அனுமதியை பெறாமலே கமல் அவருக்கு முத்தம் கொடுத்திருப்பார். தற்போது பெரிதாக்கப்பட்டு வருகிறது.
கதைப்படி அந்த முத்தக்காட்சி வேண்டாம் என்று கூறினேன். இதனை என் அப்பா , மற்றும் அம்மா ஏற்றுக்கொள்ள மாற்றார்கள் என்று கூறினேன். சரி என்று சொன்னார் இயக்குனர். பின்பு அந்த காட்சியில் இருவரும் கண்ணை மூடிக்கொண்டு மலை உச்சியில் இருந்து குதிக்கும் முன்பு என்னக்கு கமல் முத்தம் கொடுத்து விடுவார். பின்னர் என் அம்மாவிடம் எனக்கு தெரியாமேலே இந்த காட்சி எடுக்கப்பட்டது என்று தெளிவு படுத்தினேன்.
இந்த விஷயம் இயக்குனர் பாலச்சந்தருக்கு தெரியும் ஆனால் அவர் இன்று உயிருடன் இல்லை அதைவிட்டால் கமலுக்கு தெரியும். இந்த விஷயம் எல்லாருக்கும் தெரிய வென்றும் இதுதான் என் விருப்பம் என்று நடிகை ரேகா கூறி உள்ளார்.