எலான் மஸ்க்கோட ஐடியா என்கிட்டயும் இருந்துச்சி. 13 வயதில் ரோபோ. சாதனை படைத்த சென்னை சிறுவன்.
சென்னையை சேர்ந்த பிரித்திக் என்ற 13 வயது சிறுவன் கோவிட் காலத்தில் இணையம் மூலமாக டெக்னாலஜியை கற்றுக்கொண்டு தற்போது
பொதுவாக ரோபோக்கள் வெறும் சொல்கின்ற கட்டளையை நிறைவேற்றும் இயந்திரமாக மட்டுமே பயன்படும். ஆனால் ஒரு 13 வயது சிறுவன் மனித உணர்வுகளோடு இருக்கக்கூடிய ரோபோ ஒன்றை உருவாக்கி டெக் உலகை ஆசிரியப்படுத்தியுள்ளார்.
அப்துல் கலாம் தான் என்னோட ஹீரோன்னு ஆரம்பிச்சி எலான் மஸ்க் போல வரணும்னு சொல்லிருக்காரு பிரதிக். நல்லா இருக்கிங்களா என்று புன்சிரிப்புடன் பேச துவங்கிய பிரதிக்கின் சிறப்பு பேட்டி நமது சமயம் தமிழ் நேயர்களுக்காக.
நிருபர் : உங்களை பற்றி சொல்லுங்கள் பிரதிக்
பிரதிக்: என்னோட பெயர் பிரதிக் . நான் கேஆர்எம் பப்ளிக் பள்ளியில் 9வது படிக்கிறேன். எனக்கு வயது 13 ஆகிறது. சிறு வயதிலிருந்தே சாப்ட்வேர் மற்றும் டெக்னாலஜி மேல எனக்கு ஆர்வம் இருக்கு. எப்பவும் டெக்னாலஜி வளர்ச்சி மேல ஆர்வமா இருப்பன். என்னுடைய அல்டிமேட் இலக்கே ஒரு ராக்கெட் லான்ச் பண்ணனும். என்னோட குடும்பத்த பொறுத்தவரைக்கும் அம்மா அப்பா முடிந்தளவு என்னோட முயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்து உதவி செய்வாங்க. அதே போலதான் பள்ளிலயும் எந்த சந்தேகம் கேட்டாலும் உடனே தீர்த்துடுவாங்க. எது தேவைனாலும் உடனே செஞ்சி கொடுத்துடுவாங்க.