ஏன் பெண் இசையமைப்பாளர்கள் இல்லை? – இளையராஜாவின் அதிரடி பதில்!
இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் இசைஞானி இளையராஜா. இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 – ல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் இசையமைத்த முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தார்.
இளையராஜா எவ்வளவு பெரிய புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதே அளவு பல சர்ச்சைகளையும் சந்தித்தவர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜா அங்கு கூடியிருந்த ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது ரசிகை ஒருவர் ‘ஏன் தமிழ் சினிமாவில் அதிக பெண் இசையமைப்பாளர்கள் இல்லை’ என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு இளையராஜா சற்றும் யோசிக்காமல், “நீ வாயேன், வந்துடு வந்துடு.. யோசிக்கவே வேண்டாம், ஆல் த பெஸ்ட்” எனக் கூறினார். தற்போது இவர் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.