ஏழை மாணவியை ஏமாற்றிய apollo கல்லூரி !! வெளிச்சத்துக்கு வந்த மோசடி

January 8, 2021 at 12:40 am
pc

சென்னை விருகம்பாக்கத்தில் சரண்யா என்ற மனைவி பட்ட படிப்புக்காக பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டே படிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பூந்தமல்லியில் இருப்பதாக கூறப்பட்ட அப்பல்லோ கலை அறிவியல் கல்லூரியில் Bcom-ல் சேருவதற்காக தியாகராயநகரில் உள்ள கல்லூரியின் நிர்வாக அலுவலகத்திற்கு சென்று உள்ளார்.

ஆரம்பத்தில் 6 ஆயிரம் ரூபாய்தான் கல்வி கட்டணம் என கூறியதால் கல்லூரியில் சேர்வதற்கு ஆர்வமாக இருந்துள்ளார் பின்னர் விண்ணப்பக் கட்டணம் 150 ரூபாய் சேர்க்கை கட்டணம் 2,650 ரூபாய் பதினைந்தாயிரம் என மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் செலுத்த நிரூபித்துள்ளனர் பூந்தமல்லியில் பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டு படித்து வரலாம் என்ற நம்பிக்கையில் தாய் தந்தையர் சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் புரட்டி கட்டணமாக மொத்தம் இருபத்தி நான்காயிரம் ரூபாய் செலுத்தி உள்ளார் சரண்யா.

இந்த நிலையில் பூந்தமல்லி கீழிறங்கி அவள் நீட்டிய மாணவி சரண்யா வந்தது அவர்கள் கூறியபடி பூந்தமல்லியில் கலை அறிவியல் கல்லூரி இல்லை என்பதும் அங்கு இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் மேவலுர்குப்பம் என்ற கிராமத்தில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார் அங்கு சென்று வருவதற்கு போதுமான அளவு அரசு பேருந்து வசதி இல்லை என்பதால் அங்கு படிக்கும் திட்டத்தை கைவிட்டு தியாகராயநகரில் உள்ள நிர்வாக அலுவலகத்திற்கு சென்று பூந்தமல்லி என்று சொல்லி ஏமாற்றி விட்டீர்களே என்று நியாயம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் மேலும் 30 ஆயிரம் ரூபாய் கட்டினால் தங்கள் கல்லூரி பேருந்தில் சென்று வரலாம் என்று கூறுகின்றனர் ஆனால் சரண்யாவும் தனது பெற்றோரிடம் அவ்வளவு பணம் இல்லை கல்லூரிக்கு சென்று வருவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் கல்லூரியில் படிக்க விரும்பவில்லை என்றும் தான் செலுத்திய பணத்தை திருப்பித் தரும்படியும் கூறியுள்ளார். பணம் கிடையாது என்று மறுத்துள்ளனர்.

மாணவியை கடந்த இரு மாதங்களாக அலைக்கழித்த நிலையில் நான்காம் தேதி தனது சகோதரருடன் சென்று தனது மாற்று சான்றிதழ் இருந்தால் செலுத்திய பணத்தையும் மாணவி கேட்டுள்ளார் அப்போது அங்கிருந்த கல்லூரி மேலாளர் வெங்கட்ராமன் பணத்தை திருப்பித் தரமுடியாது என்றும் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது செய்ய முடியாமல் கொடுத்த கல்வி கட்டணத்தை திரும்பப் பெற இயலாமல் கடுமையான மன வேதனைக்கு உள்ளனர்.

கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து தனது செர்டிபிகேட்யும் மீட்டுத் தரவேண்டும் என்று மாணவி சரண்யா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மாணவியின் இந்த குற்றச்சாட்டு குறித்து கல்லூரி மேலாளர் வெங்கட்ராமன் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website