ஏ.ஆர்.ரஹ்மானுடன் வதந்தி.. இன்ஸ்டாகிராமில் மோகினி டே அதிரடி பதிவு..!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைத்து பாடகி மோகினி டே என்பவரை சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து அதிரடியாக பதிலளித்துள்ளார்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்த மறுநாள், ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றும் பாடகி மோகினி டே தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனை அடுத்து இந்த இரண்டையும் இணைத்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் தனது பக்கத்தில் தவறான தகவல்களை தனது தந்தை குறித்து பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் மோகினி டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘என் மீது விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்போது பல ஊடகங்களில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வருகிறது. அந்த அழைப்பின் பின்னணியில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியும். அவைகளை மரியாதை உடன் நிராகரித்து உள்ளேன். வதந்திகளுக்கு ஈடு தீனி போடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. என் ஆற்றலை வதந்திகளுக்கு பதில் சொல்லி செலவழிக்க நான் விரும்பவில்லை. தயவு செய்து எனது தனி உரிமையை மதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என பதில் சொல்லியுள்ளார்.