ஐஸ்வர்யாரஜினிகாந்துக்கும் எம்பி கனிமொழிக்கும் இடையே இப்படிப்பட்ட உறவா…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கும் அரசியல்வாதிக்கும் இடையே 20 வருட நட்பு இருப்பதாக அவரே சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் மற்றும் திமுக எம்பி கனிமொழி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினியும் 20 ஆண்டு கால நட்பு என்று இருவரும் இணைந்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறிய போது ’எனக்கும் கனிமொழி அக்காவுக்கும் உள்ள உறவு மிகவும் அழகானது. 20 வருட நட்பு அது, எங்கு தொடங்கியது, எப்போது பழகினோம் என்பதையே எங்களால் விவரிக்க முடியாத ஒரு உறவு.
நான் சோகமாக எப்போது உணர்ந்தாலும் யாரிடமாவது பேச வேண்டும் என்று தோன்றினால் உடனே நான் கனிமொழி அக்காவுக்கு தான் போன் செய்வேன். நான் ஒருவருக்காக வெளியே கிளம்பி வருகிறேன் என்றால் அது அக்காவுக்காக மட்டும் தான். யாருக்காகவும் நான் எங்கும் செல்ல மாட்டேன், ஆனால் கனிமொழி அக்காவுக்காக எங்கிருந்தாலும் நான் சென்று விடுவேன்.
மேலும் அவர் 18 ஆண்டுகால அரசியல் வாழ்வு என்று சொல்கிறார்கள், அது தவறு, அவர் பிறந்ததிலிருந்து அரசியலில் தான் இருக்கிறார், அரசியலை தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது, எனக்கு எப்படி சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாதோ, அது போல் தான் அவரும் என்று கூறினார்.
மேலும் அக்காவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் எனது கோவில் வழிகாட்டி அவர்தான். எந்த ஊருக்கு போனாலும் கனிமொழி அக்காவின் ஆட்கள்தான் என்னை பாதுகாப்பாக அழைத்து செல்வார்கள் என்றும் அந்த பேட்டியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.