ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கிய GST கமிஷனர்! எவ்வளவு ஏக்கர் தெரியுமா?
ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக பணிபுரிந்து வருபவர் ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கியுள்ளார்.
வனப்பகுதி கிராமம்
இந்திய மாநிலமான, குஜராத்தில் ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக பணிபுரிந்து வருபவர் சந்திரகாந்த் வல்வி.
இவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் இருக்கும் கண்டடி பள்ளத்தாக்கில் உள்ள ஜடானி என்ற கிராமத்தையே விலைக்கு வாங்கியுள்ளார்.
இந்த கிராமத்தின் பரப்பளவு சுமார் 620 ஏக்கர் பரப்பளவு ஆகும். இந்த கிராமமானது வனப்பகுதியில் இருக்கும் காரணத்தால் அங்கு மரங்கள் வெட்டப்படும் அபாயம் ஏற்படும் என்றும், அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக சட்டவிரோத கட்டிடங்கள் கட்டுப்பட்டு வருவதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், கிராமத்தில் இருக்கும் மக்களின் வீடுகளை அரசு விரைவில் கையகப்படுத்தும் என்று ஜி.எஸ்.டி. தலைமை ஆணையர் கூறியதாக சமூக ஆர்வலர் சுஷாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.