ஒரு வருடத்திற்கு பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டசிறுமி நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

சென்ற ஆண்டு சுவிட்சர்லாந்தில் அடித்த புயலில் சிக்கிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியின் உடல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது, காரில் சென்று கொண்டிருந்த அந்த சிறுமியும் அவருடன் பயணம் செய்த மற்றொரு ஆணும் புயல் வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்படுவதைக் கண்டு உதவமுடியாமல் கதறி அழுதுகொண்டிருந்தார் அந்த சிறுமியின் தாய்.
பின்னர் அந்த கார் கண்டுபிடிக்கப்பட்டாலும், அந்த காரில் யாரும் இல்லை. இந்நிலையில், சுமார் ஒரு ஆண்டுக்குப்பின், ஜெனீவா ஏரி பகுதியில் ஒரு சிறுமியின் உடல் கிடைத்துள்ளது. DNA பரிசோதனையில், அது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அந்த பிரான்ஸ் நாட்டுச் சிறுமியின் உடல்தான் என்பது தெரியவந்தது. இருந்தும், அவளுடன் பயணம் செய்த அந்த ஆணின் உடல் இதுவரை கிடைக்கவில்லை.