ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது ‘லப்பர் பந்து’.. தேதியை அறிவித்த ஹாட்ஸ்டார்..!
அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ’லப்பர் பந்து’ என்ற திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் சீன் ரோல்டன் இசையில் உருவான இந்த படம், ஏற்கனவே ஓடிடியில் வெளியாகும் என தேதி அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், தற்போது ஹாட்ஸ்டார் தனது சமூக வலைதள பக்கத்தில் ’லப்பர் பந்து’ திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து, ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் தீபாவளி அன்று இந்த படத்தை பார்க்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.திரையரங்கில் மிகப் பெரிய வரவேற்பு பெற்ற ’லப்பர் பந்து’ ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.