ஒரே நாளில் 1000 தடவை அழைப்பு: காதலனை தொல்லை செய்த பெண்ணுக்கு சிறை!
பிரித்தானியாவில், முன்னாள் காதலனுக்கு ஒரே நாளில் 1000 தடவை அழைப்பெடுத்து தொல்லை செய்து வந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோபி கால்வில் [Sophie என்ற 30 வயதுடைய பெண்ணை டேவிட் பாக்லீரோ [David என்ற நபர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாகக் பெண் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
காதலனை இழக்க விரும்பாத அவர், டேவிட்டிற்கு 1,000 முறை தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். எனினும் டேவிட் அவருடைய அழைப்பைத் தவிர்த்த நிலையில் டேவிட்டை கண்காணித்து வந்த அவர், டேவிட்டின் வீட்டிற்குள்ளும் அத்துமீறி நுழைந்துள்ளார்.
சோபியின் செயற்பாடுகளால் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் டேவிட் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சோபிக்கு 1 வருடச் சிறைத் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.