ஓடும் ரயிலில் ‘பள்ளி மாணவர்களின் ஆபத்தான சாகசம்’ -“குவியும் கண்டனம்”..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரை பேட்டையில் ஓடும் மின்சார ரெயிலில் பள்ளி மாணவருடன் சேர்ந்து மாணவி ஒருவரும் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கவரப்பேட்டை இருந்து ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில் புறப்பட்டு மெதுவாக நகரவும், அந்த மாணவி ரெயில் படிக்கட்டில் உள்ள கம்பியை பிடித்தபடி சிறிது தூரம் நடைமேடையில் ஓடி வந்து பின்னர் துள்ளிக் குதித்து ரெயிலில் ஏறுகிறார்.
பின்னர் அதே வேகத்தில் ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி தனது ஒரு காலை நடைமேடையில் உரசிய படி சாகச பயணம் செய்கிறார். அதை தொடர்ந்து மாணவர் ஒருவரும் சாகச பயணம் மேற்கொள்கிறார்.
மாணவர்களுக்கு நிகராக பள்ளி மாணவியின் இந்த சாகசம் அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலானதால் இதுபற்றி கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.