ஓமவல்லி இலையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்…
சிறுநீரகம்: சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட வைப்பதில் ஓமவல்லிக்கு மிகப்பெரிய பங்குண்டு. நம் ரத்தத்திலுள்ள அதிகப்படியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து, அந்த கழிவுகளை சிறுநீர் வழியாக உடலிலிருந்து வெளியேற்ற தூண்டுகிறது. அந்தவகையில், ஓமவல்லி இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளையும் கரைத்து வெளியேற்றுவதால், சிறுநீரகங்கள் பாதுகாக்கப்படுகின்றன
நுரையீரலின் பாதுகாவலனாக ஓமவல்லி திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஜுரம், சளி, இருமல், கபம், வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு என சுவாச கோளாறுகள் மொத்தத்திற்கும் ஒரே தீர்வை ஓமவல்லி இலைகள் தருகின்றன. ஓமவல்லி இலையை கசக்கி சாறு பிழிந்து, சிறிது சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்று போடும்போது, தலைவலி, ஜலதோஷம், நீர்க்கோத்தல் நீங்கிவிடும்.
அதேபோல, ஓமவல்லி இலையை அரைத்து, அதை தண்ணீரில் கொட்டி கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும. அதில், சிறிது ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால் தலை பாரமும், சளியும் குறையும். இந்த இலைகளில் நேரடியாகவே ஆவி பிடித்தாலும் பலன் தரும்.
கைக்குழந்தைகளுக்கு சளி, இருமல் என்றால், ஒரே ஒரு சிற்றிலை மட்டும் எடுத்து, நெருப்பில் வாட்டி, கையால் கசக்கி சாறு எடுத்து வடிகட்டி, சங்கில் ஊற்றி தரலாம். பெரியவர்களுக்கு 3 இலைகள் போதும். இதனை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க விட்டு, பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். இதனால், அஜீரண பிரச்சனை, நெஞ்செரிச்சல் போன்றவை இருந்தால், இந்த இலை சாற்றின் சில துளிகளை எடுத்துக் கொண்டாலே போதும்.
தழும்புகள்: முகத்தில் மருக்கள், பருக்கள், சிறு கட்டிகள், அம்மை பாதிப்பு தழும்புகள், போன்றவற்றிற்கும் ஓமவல்லி இலைகளை விழுதாக அரைத்து பற்றுப்போல போடலாம். நரைமுடி இருப்பவர்களும், ஓமவல்லி இலைகளின் விழுதினை தடவலாம். இந்த பேஸ்ட் தடவுவதால், வெள்ளை முடி கருப்பாக மாறும். தலைமுடிக்கும் குளிர்ச்சி கிடைக்கும்.