கடற்கரையில் இரவு குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்த தாய்! காலையில் அவருக்கு காத்திருந்த துயரம்..
சென்னை கடற்கரையில் படுத்துறங்கிய பெண்ணின் 8 மாத குழந்தை கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியை பூர்விகமாக கொண்டவர் சினேகா. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர், கணவரைப் பிரிந்து தனது 8 மாத குழந்தை ராஜேஸ்வரியுடன் சென்னைக்கு வந்துள்ளார்.அங்கு ஊசிமணி, மாலைகள், பலூன்கள் விற்று வந்த சினேகா, கடற்கரை சாலையோர நடைபாதையில் நரிக்குறவர் மக்களுடன் வசித்து வந்துள்ளார்.
சினேகா கடந்த வியாழக்கிழமை அன்று இரவு வழக்கம்போல, தனது குழந்தையுடன் தூங்கிய நிலையில் காலையில் எழுந்து பார்த்துபோது குழந்தை அருகில் இல்லாமல் பாய் மட்டும் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.எங்கு தேடியும் கிடைக்காததால், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.