கடவுள் இருக்கான் குமாரு: மணிமேகலை விவகாரம் குறித்து பிக்பாஸ் ஐஷூ அம்மாவின் பதிவு?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியிலிருந்து மணிமேகலை விலகி விட்டதாக அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து சின்னத்திரையில் உள்ள பல பிரபலங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குக் வித் கோமாளி இருந்து மணிமேகலை விலகுவதாக அறிவித்த பதிவில் ஃபரீனா உள்பட சில குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களே வாழ்த்து தெரிவித்திருப்பதை பார்க்கும்போது இன்னும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆனால் வெளியே சொல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்பதும் தெரிய வருகிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ஐஷு, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அவரது பெற்றோர் மிகுந்த தர்ம சங்கடத்திற்கு உள்ளானார் என்பதும் ஒரு கட்டத்தில் தங்கள் மகளை வெளியே அனுப்புங்கள் என்று கூறியதும் தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது ஐஷூவின் அம்மா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ’கடவுள் இருக்கான் குமாரு’ என்று பதிவு செய்து #selfrespect என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார். மேலும் ’கடவுளிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்’ என்று அவர் கூறியதிலிருந்து அவர் இந்த பதிவு மணிமேகலைக்கு ஆதரவாக தான் மறைமுகமாக பதிவு செய்துள்ளார் என கமெண்ட்களில் கூறப்பட்டு வருகிறது.
மொத்தத்தில் பூனைக்கு மணிமேகலை மணி கட்டிவிட்டார் என்றும், இன்னும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பதும் ஒவ்வொன்றாக உண்மை வெளியே வரும் என்று கூறப்படுவதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.