கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…. குளிர்காலத்தில் இதயத்தை பலவீனமாக்கும் உணவுகள்!

பொதுவாக காலநிலைகள் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். அந்த சமயங்களில் நாம் நமது உடலை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது அவசியமாகும். கோடைக்காலம் சென்று குளிர்காலம் வரும் பொழுது இதமாக இருந்தாலும் இது ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும். இதனால் குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தவறும் பட்சத்தில் இருமல், சளி, காய்ச்சல் போன்ற தொற்றுக்கள் இலகுவாக வந்து விடும்.
குளிர்காலங்களில் அடிக்கடி கசாயம் குடிக்க வேண்டும், சூடான உணவுகளை மாத்திரமே சாப்பிட வேண்டும் மற்றும் உடலை எப்போதும் சூடாக வைத்து கொள்ள வேண்டும் என உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். அந்த வகையில் குளிர்காலங்களில் இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. குளிர்காலம் வந்து விட்டால் சில மா கலந்த உணவுகளை தான் அதிகமாக வாங்கி உண்பார்கள். இது முற்றிலும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் குளிர்காலங்களில் மைதாவில் தயாரிக்கப்பட்ட பரோட்டா, கோபி மஞ்சூரியன் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டாம். இது உங்களின் இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
2. குளிர்காலங்கள் வந்து விட்டால் செயற்கையான இனிப்புகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனின் சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரையின் அளவு கணிசமாக அதிகரிக்கும். இதனால் தேவையற்ற உடல்நல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
3. குளிர்காலத்தில் வெள்ளேரொட்டி மற்றும் பாஸ்தா சாப்பிடுவதை சில பழக்கமாக வைத்திருப்பார்கள். இப்படி சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிக்கும். இதன் விளைவாக 1 மற்றும் 2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தாக அமையும்.
4. சோடாவை கொண்டு தான் பெரும்பாலான செயற்கை இனிப்புகள் அதிகமாக தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் இது போன்ற உணவுகளில் பல்வேறு ரசாயன கூறுகள் மற்றும் காப்பின் இருக்கலாம். இது குளிர்காலங்களில் இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
5. சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குளிர்காலங்களில் சாப்பிடும் பொழுது அது வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தலாம். அத்துடன் உடல் பருமனையும் அதிகரிக்கச் செய்யும். இதன் விளைவாக இதய பாதிப்பு ஏற்படலாம். முடிந்தவரை இயற்கை உடலுக்கு வெப்பத்தை கொடுக்கும் உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.