#Breaking “கண்ணா லட்டு தின்ன ஆசையா” நடிகரும், டாக்டருமான சேதுராமன் உயிரிழந்தார்…
கன்னா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்தில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் வாலிப ராஜ என்ற படத்தில் கமிட் ஆனார். இப்படத்தில் விசாகா சிங், விடிவி கணேஷ், தேவதர்ஷினி, மற்றும் பட்டிமன்றம் ராஜா உள்ளியிட்ட லீடிங் நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சந்தானம் மற்றும் விடிவி கணேஷுடன் மூன்றாவது படமான சக்க போடு போடு ராஜாவில் இவரின் கேரக்டர் மிக முக்கியமானது. அதன் பிறகு இவர் 50/50 என்ற படத்தில் சுருதி ராமக்ரிஷ்னன் மற்றும் பாலசரவனுடன் நடித்தார். இந்நிலையில் இவர் மாரடைப்பால் இறந்துள்ளது சினிமா துறையினரிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.