கமலுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட ஹாலிவுட் நடிகை !

கமலஹாசன் பாலிவுட் ஹாலிவுட் உலக மொழிகளில் உள்ள பல தொழில்நுட்ப கலைஞர்களுடன் தொடர்பில் இருப்பவர். இவருடைய உலகளாவிய வளர்ச்சி கமலை சினிமா துறையில் பெரிய இடத்தில் அவரை நிறுத்தியுள்ளது. தற்போது கமல்ஹாசனைப் பற்றி ஹாலிவுட் நடிகை மெக்கன்சி மோர் தனது கமல் உடனான நினைவுகளை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் பிடரியில் இதைப்பற்றி ஒரு போட்டோவை பகிர்ந்துள்ள மெக்கன்சி. கமல்ஹாசன் நான் சிறுவயதில் இருக்கும்போது இந்தியாவிலிருந்து எனக்கு பல பரிசு பொருட்களை வாங்கி வருவார்.
அப்போது அவர் எங்களுக்கு வாங்கி கொடுத்த உடையை நானும் என் தந்தை அணிந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என அதை பகிர்ந்துள்ளார்.
மெக்கென்சி வெஸ்ட்மோர் உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதை வென்ற மைக்கேல் வெஸ்ட் மோர் என்னும் மேக்கப் ஆர்டிஸ்டின் மகள் ஆவார். மெக்கன்சி வெஸ்ட் மோர் தற்போது அமெரிக்காவில் நடிகையாகவும் பாடகியாகவும் மிகப்பெரிய பிரபலமாக வலம் வருகிறார். கமலுடன் எடுக்கப்பட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
