கல்யாண கொண்டாட்டத்தில் புகுந்து கொடுரமாக தான் ஆசைப்பட்ட பெண்ணை கொன்ற கொடூரம் !!

உத்தரபிரதேசத்தின் மீரட் பகுதியில் அஞ்சல் என்னும் 19வயது பெண்ணின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் போது காதலன் புகுந்து அஞ்சல் மற்றும் அவரது தந்தை ராஜ்குமார் கொடுரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் என்னும் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மீரட் பகுதியை சேர்ந்த அஞ்சால் என்ற இளம்பெண்ணிற்கு இரண்டு தினங்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், இரவு நேரம் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. உறவினர்கள் பலருடன் கல்யாண குதூகலத்துடன் இருந்த நிலையில், திடீரென சிலர் மணப்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.
வீட்டிற்குள் புகுந்த காதலர் மற்றும் கூட்டாளிகள் துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை சுட்டுள்ளனர். இதில் அஞ்சல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அஞ்சாலின் தந்தை மருத்துவமணியல் பலியான நிலையில், அஞ்சாலின் சகோதரருக்கும் காயம் பட்டுள்ளது.
இதுகுறித்து அஞ்சாலின் மூத்த சகோதரர் அளித்த புகாரின் பெயரில், ‘சாகர் என்ற இளைஞர் ஒருவர் எனது தங்கையின் பின்னால் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், என் தங்கைக்கு சாகரை பிடிக்கவில்லை.
இதனால் அவரை எனது தங்கை தவிர்த்து வந்துள்ளார். இதன் காரணமாக, கோபத்தில் தங்கையின் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்னதாக இரவு வீட்டிற்கு வந்த சாகர் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர், மீண்டும் தன்னுடன் எனது தங்கையை திருமணம் செய்து வைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினார். நாங்கள் மறுக்கவே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.
போலீசார் தரப்பில் கொலை வழக்கு தொடர்பாக சாகரின் நண்பர்கள் இரண்டு பேர் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான சாகர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.