“கல்யாண வயதே வரவில்லை” !! 17 வயது மாணவி ஆசைப்பட்டவனை அடைய நினைத்து எடுத்த விபரீத முடிவு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சேலம்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராம்ராஜ். இவரது மகள் சுகன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 17). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் சுகன்யா அவருடைய உறவினரும், மேஸ்திரியாக வேலை செய்யும் பிரபு என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தன் காதலை பெற்றோரிடமும் கூறி உடனடியாக தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறும் அடம்பிடித்துள்ளார்.
ஆனால் சிறுமியின் பெற்றோர், இன்னும் கல்யாண வயதை நீ நெருங்கவில்லை, அதுமட்டுமில்லாமல் உனக்கு 18 வயது கூட நிரம்பவில்லை. ஒரு வருடம் போகட்டும் என கூறியுள்ளனர். ஆனால் பெற்றோரின் அறிவுரையை அலட்சியம் செய்த சிறுமி உடனடியாக கல்யாணம் செய்யுமாறு கூறியுள்ளார். இருப்பினும் பெற்றோர்கள் சம்மதம் கிடைத்தபாடில்லை.
இதனால் கோபமடைந்த அந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தன் கையை அறுத்துக்கொண்டும், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தையும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் தன் மகள் உயிருக்காக துடிதுடிப்பதை கண்டு பெற்றோர் கதறி துடித்துள்ளனர்.
பதறிபோய் சுகன்யாவை மீட்டு ராசிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவி சுகன்யாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருமணம் செய்து வைக்காத விரக்தியில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.