கல்லூரி மாணவியின் செல்போனுக்கு வந்த மெசேஜ் லிங்க்…ரிப்ளை செய்ததால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கல்லூரி மாணவியிடம் இணையதளம் மூலம் நூதன முறையில் 87 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
அங்குள்ள தனியார் மருந்தியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருபவர் சவுந்தர்யா. இவரது செல்போனை தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று, கூகுள் பே இணையப் பணவர்த்தனை செயலிக்கு வந்துள்ள லிங்கை கிளிக் செய்யும்படி கேட்டுள்ளனர்.
அவர்கள் சொன்னபடி செய்த சவுந்தர்யாவின் வங்கிக் கணக்கில் இருந்த 87 ஆயிரம் ரூபாய் பணம் மின்னல் வேகத்தில் சூறையாடப்பட்டது.
இதன் பின்னர் சவுந்தர்யவின் தந்தை சுரேஷ், நாமக்கல் மாவட்ட காவல் கண்காளிப்பாளரிடம் புகார் அளிக்க, அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.