காதலனை நம்பி சென்ற அப்பாவி பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தயம் வா தரையில் உள்ள இலக்கை வில்லுக்கு பின்புறம் காட்டு பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது காவல்துறையின் விசாரணையில் அவர் வேடசந்தூர் அருகே உள்ள தென்னம்பட்டி பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என்பது தெரியவந்தது வேடசந்தூர் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த 1ஆம் தேதி மாலை பணிக்குச் சென்ற ஜெயஸ்ரீ வீடு திரும்பவில்லை எங்கே தேடியும் ஜெயஸ்ரீ கிடைக்காததால் பெற்றோர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் ஜெயஸ்ரீயின் செல்போனை ஆய்வு செய்ததில் ஒரே நாளில் 20 க்கும் மேற்பட்ட முறை ஒரே எண்ணிலிருந்து போன் வந்ததை கண்டறிந்த போன் வந்த எண்ணெய் ஆய்வு செய் அதில் அந்த எண் ஜெயஸ்ரீ உடன் பணிபுரிந்து வந்த தங்கதுரை என தெரியவந்தது.
கள்ளிமந்தையம் போலீசார் தங்கதுரை பற்றி விசாரணையை மேற்கொண்டனர் பழனி அருகே உள்ள கோம்பைபட்டி கிராமத்தை சேர்ந்த தங்கதுரை தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.
அதே நிறுவனத்தில் ஜெயந்தியும் பணிபுரிந்து வந்துள்ளார் இந்நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பின்பு இருவரும் விடுமுறை நாட்களில் தனியாக சந்தித்து பழகி உள்ளன. 6 மாத காலமாக மலர்ந்த நிலையில் தற்போது ஜெயஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார் சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்த தங்கதுரை தன்னை திருமணம் செய்துகொள்ள ஜெயஸ்ரீ வற்புறுத்துவதாக அவரது வீட்டிற்கு போன் செய்ததால் ஜெயஸ்ரீயை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
கடந்த 31ஆம் தேதி அன்று இரவு தங்க துறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜெயஸ்ரீ மறுநாள் அங்கு வருவதாகவும் தன்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். 1ம் தேதி மாலை ஒட்டன்சத்திரத்தில் பேருந்தில் வந்த ஜெயஸ்ரீயை இருசக்கர வாகனத்தில் தங்கதுரை மற்றும் அவருடன் பணிபுரியும் கூட்டாளி ஜெகநாதன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர் மூவரும் கள்ளிமந்தையம் அருகே உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு பின்புறம் வைத்து காதலை முறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த தங்கதுரை அவனது கூட்டாளியும் சேர்ந்து ஜெயஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்து அங்கேயே ஒரு புதரில் உடலை மறைத்து வைத்து விட்டு தப்பியது விசாரணையில் அம்பலமானது.
இதற்கிடையே காதலனின் வெறிச்செயல் குறித்து அறிந்த ஜெயஸ்ரீயின் உறவினர்கள் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்பு தாராபுரம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் கொலையாளிகள் இருவரையும் தூக்கிலிட வேண்டும் என கூச்சலிட்டு அவர்கள் மறியலை கைவிட்டு விட்டு ஜெயஸ்ரீயின் உடலை வாங்கிச் சென்றனர் கைது செய்யப்பட்ட தங்கதுரை மற்றும் ஜெகநாதன் ஆகிய இருவரையும் கள்ளிமந்தயம் போலீசார் ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்ற அதே நேரத்தில் காதலில் விழுந்து காதலனை நம்பி சென்ற பாவத்திற்கு அப்பாவி பெண் கொல்லப் பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.