காதலித்த’…. ‘காதலியை வீட்டிற்க்கே சென்று வலுக்கட்டாயமா கொடூரம்’.. ‘செய்த காதலன்’.
கோவையை அடுத்த கல்லுக்குழி பகுதியை சேர்ந்த நந்தினி பிரபல தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நந்தினி அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞரை காதலித்து வந்தார் தற்போது காதலர் தினேஷ் மது , கஞ்சா , மற்றும் பல பெண்களுடன் தொடர்பு என அனைத்து தீ’ய பழக்கங்களும் கொண்டு இருந்தார்.
இதனை அறிந்த நந்தினி காதலர் தினேஷை விட்டு விலகி சென்றார் இதனையறிந்த தினேஷ் ஏன் என்னைவிட்டு விலகி போகிறாய் என்று கேட்டபோது, அவர் வைத்திருக்கும் அனைத்து தீய பழக்கங்களும் சுட்டி காட்டினார், மேலும் நம் திருமணத்திற்கு என் அம்மாவிடம் மிகவும் சிரமப்பட்டு சம்மதம் வாங்க்கினேன் ஆனால் நீ இதுபோல கெட்டவனாக மாறி போகிறார் என்று கூறினார்.
இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்னை மறந்து விடு என்று கூறினார். இதனை சற்றும் ஏற்றுக்கொள்ளாத தினேஷ் அடிக்கடி நந்தினியை தன் காதலை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் நந்தினி தினேஷை விட்டு விலகி சென்றார்.
பின்னர் ஒரு கட்டத்தில் கோபமான தினேஷ் அளவுக்கு அதிகமான மது போதையில் நந்தினியை பார்க்க அவர் வீட்டிற்க்கே சென்றார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் கோபமான நந்தினி உன்னுடன் வாழ்வதற்கு சாவதே மேல் என்று கூறினார் இதனால் ஆத்திரத்தில் தான் எடுத்து சென்ற சாணிப்பவுடரை கரைத்து நந்தினி வாயில் ஊற்றியுள்ளார். பின் சிறிது நேரத்தில் நந்தினி மயக்கமானார்.
பின்னர் பதற்றத்தில் தினேஷ் அங்கிருந்து தப்பித்து ஒட்டிவிட்டார். நந்தினி அம்மா வந்து பார்த்து அதிர்ச்சியானார் பின்னர் மயக்கத்தில் இருந்த நந்தினியை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல் தினேஷும் சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.