காதலியை கரம்பிடித்த பிரபல தமிழ் இயக்குனர் பி.எஸ்.மித்ரன்…


இயக்குனர் பி.எஸ்.மித்ரன் திருமணம் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார்.
பிரபல இயக்குனர்
இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். அதனைத் தொடர்ந்து ஹீரோ, சர்தார் படங்களை இயக்கினார்.
சினிமா பத்திரிகையாளரான ஆஷாமீரா ஐயப்பன் என்பவரை பி.எஸ்.மித்ரன் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடந்தது.
திருமணத்தில் இணைந்த காதல்
இந்த நிலையில் பி.எஸ்.மித்ரன் – ஆஷா மீரா ஜோடியின் திருமணம் இன்று நடந்து முடிந்தது. இதில் இயக்குனர்கள் ரத்னகுமார், ரவிக்குமார் உட்பட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் கலந்துகொண்டு தம்பதியை வாழ்த்தினர்.
சமூக வலைத்தளங்களில் பி.எஸ்.மித்ரனின் திருமண புகைப்படங்கள் வைரலாகும் நிலையில் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.