காதலியை பழிவாங்க அவள் நிர்வாண வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்!!
அஜித்குமார் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வசித்து வருபவர். இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரி மாணவி ஒருவருடன் நட்புடன் பழகியுள்ளார் பின்னர் நட்பு காதலாக மாறி இருவரும் அடிக்கடி வெளியில் சந்திப்பதும், செல்போன் வீடியோ காலில் பேசுவதுமாக இருந்துள்ளனர். அஜித் வற்புறுத்தியதால் நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை அப்பெண் அஜித்துக்கு அனுப்பியுள்ளார்.
இவர்கள் காதலில் விரிசல் விழ, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட அஜித்துடன் பேசுவதை அப்பெண் நிறுத்திவிட்டார். பின்பு அவரை சந்திப்பதையும் நிறுத்தி விட்டார். இதில் ஆத்திரமடைந்த அஜித் பழிவாங்கும் நோக்குடன் அப்பெண்ணின் நிர்வாண வீடியோக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். இதன் பின் அப்பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.