காய்கறி கார்கோவில் தங்கம் கடத்தல் !! விசாரணையில் பல முக்கிய புள்ளிகள்

கேரளாவை சேந்த ஸ்வப்னா சுரேஷ் என்பவர் தனது பதவியை பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கேரளாவுக்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். அண்மையில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தல் விவகாரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.
என்ஐஏ அதிகாரிகள் ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்தியதில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடன் தங்கம் கடத்தப்பட்டதாக ஸ்வப்னா வாக்குமூலம் அளித்துள்ளார். கார்கோ விமானத்தில் காய்கறிகள் கொண்டு செல்லும் கண்டெய்னர்கள் மூலம் பணம், நகை கடத்தப்பட்டதாக ஸ்வப்னா தகவல் அளித்துள்ளார்.

என்ஐஏ அதிகாரிகள் காவலில் விசாரணையை முடித்து கடந்த நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவருடன் கைதுசெய்யப்பட்ட சந்தீப் நாயர் ஆகியோரை அடுத்த மாதம் 21-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த தங்க கடத்தல் விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கும் தொடர்புடையதால் விசாரணை தீவரமடைந்துள்ளது.