காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தந்தை-மகன் என இருவர் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூர்யா, நடிகர் விவேக், பாடகி சுசித்ரா, என பலர் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
சாத்தான்குளத்தில் காவல்துறையினர் உங்களின் அத்துமீறல் வன்முறை மூலம் மக்கள் மனதை வெல்ல முடியாது என நடிகர் சூர்யா அதிரடியாக செய்தி வெளியிட்டார்.
காவல்துறையை மையமாக வைத்து பல வெற்றி படங்களை இயக்கிய அதிரடி இயக்குனர் ஹரி அவர்கள் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். இது குறித்து செய்தி வெளியிட்ட அவர், “காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்!”
“சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் நடந்துவிட கூடாது. இதற்கு ஒரே வழி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதே.! காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே களங்கப்படுத்தியுள்ளது என இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார்.

