குளிர்காலத்தில் யாரெல்லாம் கேரட் சாப்பிடக்கூடாது?
தற்போது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் குளிர்காலம் நிலவி வருகின்றது. வழக்கமாக கோடைக்காலங்களை விட குளிர்காலங்களில் உணவு பழக்கங்களில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். இந்த பருவத்தில் பல வகையான காய்கறிகளை சந்தையில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து எடுத்து கொள்வதால் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் கிடைக்கும்.
இதன்படி, சந்தையில் கிடைக்கும் காய்கறிகள் கேரட்டை குறிப்பிட்ட சிலர் சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனின் கேரட்டில் இருக்கும் சில ஊட்டசத்துக்கள் சிலரின் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும் என்கிறார்கள். அந்த வகையில், குளிர்காலங்களில் கேரட்டை சாப்பிடக் கூடாதவர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. அடிக்கடி வயிற்று கோளாறு பிரச்சனை இருப்பவர்கள் குளிர்காலங்களில் கேரட் சாப்பிடுவதை குறைக்க வுண்டும். இது உங்களின் வயிற்றுக்குள் வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உதாரணமாக வயிற்று உப்புசம், அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
2. குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் கேரட் சாப்பிடும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் கேரட்டில் இயற்கையாக சர்க்கரை உள்ளது. இதனால் உங்களின் ரத்த சக்கரை அளவு அதிகரிக்கலாம்.
3. சிலருக்கு சருமத்தில் அடிக்கடி ஒவ்வாமை பிரச்சனை வரும். அதாவது உடலில் அரிப்பு, தடிப்புகள் மற்றும் பருக்கள் வரலாம். இது போன்ற பிரச்சினையுள்ளவர்கள் கேரட் சாப்பிடுவதை முற்றிலும் குறைக்க வேண்டும். ஒவ்வாமை பிரச்சினையுள்ளவர்கள் முடிந்தவரை கேரட்டை குறைவாக எடுத்து கொள்வது அவசியம்.
4. குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் கேரட் அதிக அளவு சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். ஏனெனின் கேரட்டில் அதிகமாக எடுத்து கொள்ளும் தாயின் பால் சுவையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். இதனால் குழந்தைகள் பால் குடிக்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது.
5. மன அழுத்தம் அல்லது வேறு சில காரணங்களால் இரவில் தூங்க முடியாமல் கஷ்டப்படும் பொழுது கேரட் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது வயிற்றிற்குள் சென்று எரிச்சல் உணர்வை தூண்டும். அதிலும் குளிர்காலங்களில் கேரட்டினால் ஏற்படும் தாக்கம் அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.