குழந்தைகள் முன்பு மீண்டும் கணவரை திருமணம் செய்த நடிகை சன்னி லியோன்!
ஒரு காலத்தில் ஆபாச நடிகையாக ஒரு மாதிரியான படங்களில் நடித்து உலகளவில் பேமஸ் ஆனவர் சன்னி லியோன். அந்த தொழில் பிடிக்காமல் ஒரு கட்டத்துக்கு மேல் தனக்கான அங்கீகாரம் வேண்டும் என நினைத்து சன்னி லியோன் மும்பைக்கு வந்து செட்டில் ஆனார். ஹிந்தி படங்களில் நடித்து வந்தவர் இப்போது தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2011ம் ஆண்டு டேனியல் வெப்பர் என்பவரை சன்னி லியோன் திருமணம் செய்துகொண்டார்.
நிஷா கவுர் எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். பின் வாடகை தாய் மூலம் கடந்த 2018ம் ஆண்டு இரு ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.
இந்த நிலையில் நடிகை சன்னி லியோன் தனது குழந்தைகள் முன்பு கணவரை மீண்டும் திருமணம் செய்துகொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.