“குவாரன்டைனில் குதூகலம்” மீரா மிதுன் வெளியிட்ட வைரல் வீடியோ
மாடல் அழகியும் – நடிகையுமாக மீரா மிதுன் ‘8 தோட்டாக்கள், ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் போதை ஏரி புத்தி மாறி’ போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் – 3′ நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்து அவர் மிகவும் பிரபலமானார். தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை, அரசியல் தொடர்பான கருத்துக்களையும் அடிக்கடி பதிவிட்டுத் தொடர்ந்து சர்ச்சை நாயகியாக வலம் வருகிறார்.
அண்மையில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் 2-வது போஸ்டரில் விஜயின் போஸ் போலவே போஸ் கொடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் “யார் யாரைக் காப்பி செய்தது.. இது டிசம்பர் 2019-ல் எடுக்கப்பட்ட எனது கிங்பிஷ்ஷர் ரேம்ப் ஷோ புகைப்படம். எனவே இதற்குப் பதில் தெரிந்துவிட்டது” என்று பதிவிட்டார். இதைப்போல அடிக்கடி சர்ச்சைக்கு ஆளாகும் சூப்பர் மாடல் மீரா நேற்று யோகேஷ் என்பவருடன் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு தான் காதலில் விழுந்துகொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த தனிமைப்படுத்துதல் தொடரும் என்று தெரிவித்த மீரா மிதுன் தற்போது அடுத்த வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கின்றது.