கூலி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?
முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நாகர்ஜுனா, ஷோபின் ஷபீர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக சில தகவல்கள் இணையத்தில் உலா வந்தது. ஆனால், இது உண்மையில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், அமரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக பாலிவுட் சென்றிருந்த சிவகார்த்திகேயனிடம், ‘கூலி படத்தில் நடிக்கிறார்களா’ என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் ‘அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. எனக்கு கூலி படத்திற்கும் இருக்கும் ஒரே தொடர்பு நான் ரஜினியின் ரசிகன் என்பது மட்டும் தான். அந்த படத்தில் நான் நடிக்கவில்லை’ என கூறி வந்தந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.